Category

All

BOOKS

BOOKS

ஒட்டுத் திண்ணை

ஒட்டுத்திண்ணை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமங்களில் திண்ணை இல்லாத வீடே இருக்காது. அவரவர் வசதிக்கேற்ப, திண்ணையின் அளவும் அழகியலும் சொக்க வைக்கும். போகிற போக்கில் ஒரு நொடி நலம் விசாரிப்பதைப் போல, ஒரு செய்தியைப் பகிர்ந்து விட்டுப் போகிற இடம் இந்தத் திண்ணை. அதிலும் அங்கே உட்கார்ந்திருக்கும் ஆளைப் பொறுத்து, அதன் மதிப்பும், அந்த வீதியின் பெருமையும் இருக்கும். இதை, இந்தத் தலைமுறை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்நூலுக்கு ஒட்டுத்திண்ணை என்று பெயரிடப்பட்டது. இந்தத் திண்ணையில், குப்புசாமி, சுப்புசாமி ஆகிய இரு மனிதர்கள் பேசும் வாழ்வியல் கூறுகள் இடம் பெற்றுள்ளன. இயல்பான கதைகளுடன் செய்திகளைச் சுவையாகச் சொல்லும் நூல்.

110.00
ஒட்டுத் திண்ணை

சீர்மிகு சாகுபடி - தொகுதி 1

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 1 இந்த நூலில், விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி, நெற்பயிரைத் தாக்கும் நோய்கள், மானாவாரி வேளாண்மை உத்திகள், பயிர்களைக் காப்பதில் வேம்பின் பங்கு, பச்சைப்பயறு, உளுந்தைத் தாக்கும் நோய்கள், தோழமைப் பயிர்கள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உயிரியல் உத்திகள், மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள், கலப்புப் பண்ணையம், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், கேழ்வரகைத் தாக்கும் நோய்கள், மஞ்சூரியன் தேயிலை வடிநீர், பார்த்தீனியத்தை அழிக்கும் மெக்சிகன் வண்டு, தக்காளியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், நிலையான மண்வள மேலாண்மை, தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி, சேப்பங்கிழங்கைத் தாக்கும் இலைக்கருகல் நோய், வேளாண்மையில் காந்த சிகிச்சை, தென்னையைத் தாக்கும் சுருள் ஈ, கத்தரியைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், விளைச்சலைக் குறைக்கும் மாவுப்பூச்சி, உருளைக்கிழங்கைத் தாக்கும் நோய்கள், பயறு வகைகளைத் தாக்கும் பூச்சிகள், பருத்தியைத் தாக்கும் பூச்சிகள், வாழையைத் தாக்கும் நோய்கள் ஆகிய தலைப்புகளில், உத்திகள் இடம் பெற்றுள்ளன.

120.00
சீர்மிகு சாகுபடி - தொகுதி 1

உற்பத்தியை உயர்த்தும் உத்தி

உற்பத்தியை உயர்த்தும் உத்திகள் இந்த நூலில், மானாவாரியில் மண்வளம் காத்தல், வீரிய ஒட்டு மக்காச்சோள விதை உற்பத்தி, மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பு, பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு, தங்க அரிசி உற்பத்தி, நேரடி நெல் விதைப்புக் கருவி, மல்லிகையில் ஏற்படும் சத்துக் குறைகள், சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் பராமரிப்பு, இலைக்கருகலைக் கட்டுப்படுத்தும் உயிரியல் உத்தி, உழவர்கள் உரிமைச் சட்டம், களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுதல், உளுந்து சாகுபடி, சீமைக்கருவேல மரம், குப்பைமேனி, முடக்கத்தான் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன.

80.00
உற்பத்தியை உயர்த்தும் உத்தி

வாரிமேடு

வாரிமேடு வாரிமேடு என்னும் இந்தச் சொல்லும் இளைய தலைமுறை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் வைக்கப்பட்டது தான். உழுதாலும், பாத்திப் பிடித்தாலும், நாற்று நட்டாலும், தண்ணிக் கட்டினாலும், களை எடுத்தாலும், கதிரறுத்தாலும், கொஞ்ச நேரம் உட்கார்ந்து இளைப்பாற, உண்ண, ஊர்க்கதை பேச உரிமைப்பட்ட இடமாய் இருப்பது, வாரிமேட்டில் இருக்கும் பூவரச மரத்து நிழல் தான். நாச்சியும் பேச்சியும், இந்த வாரிமேட்டில் பகிர்ந்து கொள்ளும் பிரச்சனை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தின் உறவை, நட்பை, இன்பத்தை, துன்பத்தை, கையறு நிலையை மனக்கண் முன் நிறுத்தும். இதுவும் சுவையான கதைகளுடன் செய்திகளைத் தரும் நூலாகும்.

100.00
வாரிமேடு

வேளாண் தொழில்கள்

வேலை வாய்ப்பைத் தரும் வேளாண் தொழில்கள் இந்த நூலில், சிப்பிக்காளான் வளர்ப்பு, பால் காளான் வளர்ப்பு, மருத்துவக் காளான் வளர்ப்பு, தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு, மானாவாரியில் பழமரங்கள் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, சுருள்பாசி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தென்னை நார்க்கழிவு உரம் தயாரிப்பு, மாடித்தோட்டம் அமைத்தல், நவீன நாற்றங்கால் அமைத்தல், வெள்ளாடு வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, பசுமாடு வளர்ப்பு, எருமை மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஜப்பானிய காடை வளர்ப்பு, செல்லப் பறவைகள் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, கினிக்கோழி வளர்ப்பு, சீமை வாத்து வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகிய தலைப்புகளில், தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஊரகத் தொழில் வாய்ப்புக்கான நல்ல நூல்.

140.00
வேளாண் தொழில்கள்

விவசாய இடுபொருள்கள்

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 4 - இயற்கை விவசாய இடுபொருள்கள் இந்த நூலில், பஞ்சகவ்யா, தசகவ்யா, மீன் அமிலம், அமுதக் கரைசல், தேமோர்க் கரைசல், அரப்பு மோர்க் கரைசல், தொல்லுயிரிக் கரைசல், பூச்சி விரட்டி, காய்ப்புழு விரட்டி, இலைப்பேன் விரட்டி, இலை, தண்டுத் துளைப்பான் விரட்டி, நோய் விரட்டி, நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் விரட்டி, ஒட்டுண்ணிகள், பயிர்கள் காப்பில் பொறிகள், இ.எம்.கரைசல், வேம்பு சார்ந்த இடுபொருள்கள், பல பயிர்கள் சாகுபடி, ஊடுபயிர்கள், உயிர் உரங்கள், மண்புழு உரம், பசுந்தாள் உரப்பயிர்கள், இன்னும் பல தகவல்கள் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, இயற்கை இடுபொருள்கள் குறித்த முழு நூலாகும்.

75.00
விவசாய இடுபொருள்கள்

காய்கறிப் பயிர்கள்

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 3 - காய்கறிப் பயிர்கள் இந்த நூலில், தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், சுரை, பாகல், புடல், பீர்க்கு, அவரை, கொத்தவரை, வெள்ளரி, சீமை வெள்ளரி, பூசணி, சாம்பல் பூசணி, தர்ப்பூசணி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட், முட்டைக்கோசு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெற்றிலை வள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, செடி முருங்கை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், பயிர்களும் பட்டங்களும் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான முழு நூலாகும்.

90.00
காய்கறிப் பயிர்கள்

தோட்டக்கலை சாகுபடி உத்திகள்

தோட்டக்கலை சாகுபடி உத்திகள் இந்த நூலில், சம்பங்கி மலர் சாகுபடி, செண்டுமல்லி சாகுபடி, குண்டுமல்லி சாகுபடி, ரோஜா சாகுபடி, அரளிப்பூ சாகுபடி, சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி, கனகாம்பரம் சாகுபடி, முருங்கை சாகுபடி, கறிவேப்பிலை சாகுபடி, மரவள்ளிக் கிழங்கு சாகுபடி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி, சௌசௌ சாகுபடி, விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி, கத்தரி சாகுபடி, துல்லியப் பண்ணையத்தில் கத்தரி சாகுபடி, துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி, முருங்கை இலை சாகுபடி, மிளகு சாகுபடி, மஞ்சள் சாகுபடி, இலை வாழை சாகுபடி, முந்திரி சாகுபடி, உயர் விளைச்சல் முந்திரி இரகங்கள், பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி, எண்ணெய்ப் பனை சாகுபடி, இலவங்கப்பட்டை மரம் சாகுபடி, வீட்டுத் தோட்டம் அமைத்தல், மாடித்தோட்டம் அமைத்தல், பால் காளான் வளர்ப்பு, காய்கறி நாற்றங்கால் மேலாண்மை, குழித்தட்டுகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி, காய்கறிகளும் அறுவடைக் காலமும், காய்கறிப் பயிர்களுக்கான உர அளவுகள், குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம், காய்கறிப் பயிர்களில் மூடாக்கு, தரமான எலுமிச்சை நாற்றுத் தயாரிப்பு, தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம், தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி, தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ, நீரைச் சிக்கனப்படுத்தும் சொட்டுநீர்ப் பாசனம் ஆகிய தலைப்புகளில், உத்திகள் இடம் பெற்றுள்ளன.

280.00
தோட்டக்கலை சாகுபடி உத்திகள்

பயன்மிகு வேளாண் தகவல்கள்

பயன்மிகு வேளாண் தகவல்கள் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு மருத்துவம், கோடையில் கோழிகளைக் காக்கும் வீட்டு மருத்துவம், ஆட்டுக்கொல்லி நோய்க்கான வீட்டு மருத்துவம், செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள், வீட்டில் இருக்க வேண்டிய மூலிகைகள், பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?, கரும்புத் தோகையில் ஊறுகாய்ப்புல் தயாரிப்பு, நிறைவான வருமானம் தரும் வாத்துகள், கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனத்தின் பங்கு, கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தைத் தரும் முறை, மழைக்காலத்தில் பசுந்தீவன மேலாண்மை, கால்நடைகளுக்கு உணவாகும் அசோலா, புங்கனூர் குட்டை மாடுகள், மழைக்காலமும் குடற்புழு நீக்கமும், கோடையில் எருமைகள் பராமரிப்பு, கோடையில் ஆடுகள் பராமரிப்பு, கோடையில் சினை மாடுகள் பராமரிப்பு, கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை, பல்லுயிரிகளைக் காக்கும் உயிர் வேலிகள், ஆளி விதையின் பயன்கள், சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை, நாய்களைத் தாக்கும் உண்ணிகள், கோவைக்காயின் மருத்துவக் குணங்கள், பாம்புக் கடியிலிருந்து காத்துக் கொள்ளும் முறைகள், கோழிகளைத் தாக்கும் சிறு மூச்சுக்குழல் நோய் ஆகிய தலைப்புகளில், உத்திகள் விளக்கப்பட்டுள்ளன.

120.00
பயன்மிகு வேளாண் தகவல்கள்

மானாவாரி சாகுபடி உத்திகள்

மானாவாரி சாகுபடி உத்திகள் மானாவாரி சாகுபடி உத்திகள், மானாவாரியில் விளையும் பயிர்கள், மானாவாரிப் பயிர்களில் வறட்சி நிர்வாகம், மானாவாரி நிலங்களில் மழைநீர்ச் சேமிப்பு, மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல், மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழமரங்கள் வளர்ப்பும், மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர், மானாவாரியில் வளரும் மரங்கள், மானாவாரியில் வளரும் மருத்துவ மரங்கள், நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள், குதிரைவாலி சாகுபடி, வரகு சாகுபடி, பனிவரகு சாகுபடி, கேழ்வரகு சாகுபடி, சாமை சாகுபடி, தினை சாகுபடி, மானாவாரியில் விளையும் சோள இரகங்கள், மக்காச்சோளம் சாகுபடி, தட்டைப்பயறு சாகுபடி, உளுந்து, பாசிப்பயறு சாகுபடி, துவரை சாகுபடி, நிலக்கடலை சாகுபடி, சூரியகாந்தி சாகுபடி, ஆமணக்கு சாகுபடி, பகுதி மானாவாரி நெல் சாகுபடி, புழுதியில் நேரடி நெல் விதைப்பு, மானாவாரியில் கொத்தமல்லி சாகுபடி, மானாவாரியில் மிளகாய் சாகுபடி, வெட்டி வேர் சாகுபடி, மானாவாரிப் பகுதியை மேம்படுத்தும் உத்திகள், மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு, மானாவாரிக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம், ஆகிய தலைப்புகளில் உத்திகள் இடம் பெற்றுள்ளன.

200.00
மானாவாரி சாகுபடி உத்திகள்

கரும்புப் பயிர்

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 12 - கரும்புப் பயிர் இந்த நூலில், கரும்பு சாகுபடியின் அவசியம், கரும்புப் பட்டங்கள், விதைக்கரும்பு உற்பத்தி, திசு வளர்ப்பு முறையில் நாற்று உற்பத்தி, கரும்பு நடவு முறைகள், கட்டைக் கரும்பு சாகுபடி, செம்மைக் கரும்பு சாகுபடி, வறட்சியில் மகசூலைக் கூட்டும் உத்திகள், களர் நிலத்தில் மகசூலைப் பெருக்கும் உத்திகள், கரும்பில் பூக்கள் பூப்பதைத் தவிர்க்கும் முறைகள், கரும்பில் களை நிர்வாகம், கரும்பைத் தாக்கும் நூற்புழுக்கள், கரும்பைத் தாக்கும் நோய்கள், கரும்பைத் தாக்கும் பூச்சிகள், மறுதாம்புக்கு உரமாகும் கரும்புத் தோகை, கரும்பில் நுண்ணுயிர்களின் அவசியம், கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம், கரும்புக்கு ஏற்ற உர நிர்வாகம், கரும்பில் வறட்சியைத் தவிர்க்கும் முறைகள், இயந்திரங்கள் மூலம் கரும்பு சாகுபடி ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, கரும்பு சாகுபடிக்கான முழு நூலாகும்.

200.00
கரும்புப் பயிர்

மூலிகைப் பயிர்கள்

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 11 - மூலிகைப் பயிர்கள் இந்த நூலில், அஸ்வகந்தா, வல்லாரை, பதிமுகம், பச்சௌலி, நோனி, பாமரோசா, சிறு குறிஞ்சான், சிட்ரொனெல்லா, துளசி, எலுமிச்சைப் புல், மருந்துக் கூர்க்கன், சர்ப்பகந்தா, கண்வலிக் கிழங்கு, மருந்துக் கத்தரி, திப்பிலி, வெட்டி வேர், மரிக்கொழுந்து, திருநீற்றுப் பச்சிலை, சதாவரி, கற்றாழை, அவுரி, நித்திய கல்யாணி, புதினா, வள்ளிக்கிழங்கு, அதிமதுரம், கீழாநெல்லி, வெற்றிலை, அத்தி, இலவங்கம், மிளகு ஆகிய பயிர்கள் சாகுபடிக்கான தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, மூலிகைப் பயிர்கள் சாகுபடிக்கான முழு நூலாகும்.

150.00
மூலிகைப் பயிர்கள்

சீர்மிகு சாகுபடி - தொகுதி 8

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 8 இந்த நூலில், மண்வளம் பெருக்கும் உயிர் உரங்கள், விதை மூலம் சின்ன வெங்காய சாகுபடி, மிளகாயைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள், அடர் நடவு முறையில் வாழை சாகுபடி, இலை வண்ண அட்டை, குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி, நிலக்கடலையைத் தாக்கும் பூச்சிகள், இலைவழி நுண்ணூட்டத்தின் அவசியம், எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள், வாழையில் மகசூலைக் கூட்டும் உத்திகள், நேரடி நெல் விதைப்பு, கத்தரி சாகுபடி, உழவியல் முறையில் பூச்சிக் கட்டுப்பாடு, நுண் சத்துகளின் அவசியம், நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள், வெண்டை சாகுபடி, நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ், தரமான தென்னங்கன்று உற்பத்தி, பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள், மண் புழுக்களின் வகைகள், உரத்தயாரிப்புக்கு உகந்த மண்புழுக்கள், உழவர்களின் உற்ற தோழன் சிலந்தி ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன.

150.00
சீர்மிகு சாகுபடி - தொகுதி 8

அங்கக வேளாண்மை உத்திகள்

அங்கக வேளாண்மை உத்திகள் இந்நூலில், இயற்கை வேளாண்மை, பண்டைக்கால இயற்கை வேளாண்மை முறைகள், பாரம்பரியப் பசு வகைகளின் முக்கியத்துவம், நிலையான மண்வள மேலாண்மை, இயற்கை உரங்கள் தயாரிப்பு மற்றும் பயன்கள், மட்கு உரங்கள், இயற்கை வேளாண்மை முறையில் களைக்கட்டுப்பாடு, நன்னெறி வேளாண்மை உத்திகள், நுண்ணுயிர் உரங்கள், வீரியமுள்ள நுண்ணுயிர்கள், பஞ்சகவ்யா, தசகவ்யா, இயற்கை வேளாண்மையில் நோய் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு, தாவரப் பூச்சிக் கொல்லிகள், உயிரியல் பூச்சிக் கொல்லிகள், உயிரியல் நோய்க் கொல்லிகள், தோட்டப் பயிர்களில் இயற்கை முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு, இயற்கை வேளாண்மையில் தர முன்னேற்றம், இயற்கைப் பதனப் பொருள்கள், இயற்கை விவசாய மேம்பாட்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், அங்கக வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், அங்கக வேளாண்மையில் தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி, ஆகிய தலைப்புகளில் உத்திகள் கூறப்பட்டுள்ளன. அங்கக வேளாண்மையில் நாட்டமுள்ள விவசாயிகளுக்கு, இந்நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

300.00
அங்கக வேளாண்மை உத்திகள்

ஒருங்கிணைந்த பண்ணையம்

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 9 - ஒருங்கிணைந்த பண்ணையம் இந்த நூலில், ஒருங்கிணைந்த பண்ணையம், பெரம்பலூர் மாவட்டம்: மண் மற்றும் தட்ப வெப்பம், மானாவாரி மற்றும் தரிசு நிலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம், தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம், வேளாண்மையுடன் மீன் வளர்ப்பு, அசோலா வளர்ப்பு, மண்புழு உயிர் உரம், உயிரியல் முறைகளில் பயிர்களைப் பாதுகாத்தல், எலிகளை ஒழித்தல், காளான் வளர்ப்பு, சிப்பிக்காளான் வளர்ப்பு, பால் களான் வளர்ப்பு, பண்ணைக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், வெள்ளாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, பகுதிக்கேற்ற பண்ணைய முறைகள், ஒருங்கிணைந்த பண்ணையம்: உற்பத்தி மற்றும் செலவுகள் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விளக்கும் முழு நூலாகும்.

140.00
ஒருங்கிணைந்த பண்ணையம்

பயறுவகைப் பயிர்கள்

சீர்மிகு சாகுபடி நுட்பங்கள் - தொகுதி 10 - பயறுவகைப் பயிர்கள் இந்த நூலில், பயறுவகைப் பயிர்களின் அவசியமும் உற்பத்தியும், பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும், பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற உழவியல் நுட்பங்கள், பயறுவகைப் பயிர்கள் சாகுபடியில் மண்ணாய்வும் உர நிர்வாகமும், துவரை, உளுந்து, பாசிப்பயறு சாகுபடியில் உர நிர்வாகம், பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நோய்கள், பயறு வகைகளில் விதை உற்பத்தி, நடவு முறையில் துவரை சாகுபடி, நெல் தரிசில் உளுந்து சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய விளைபொருள் மேலாண்மை, பயறு வகைகளில் உள்ள சத்துகளும் மதிப்புக் கூட்டலும் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன. இது, பயறு வகைகள் சாகுபடிக்கான முழு நூலாகும்.

130.00
பயறுவகைப் பயிர்கள்

வேளாண் செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய வேளாண் செய்திகள் இந்த நூலில், வேளாண்மையில் பேரழிவை ஏற்படுத்தும் வெப்ப அழுத்தம், தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை, அப்சிசிக் அமிலம் என்னும் தாவர அழுத்த ஹார்மோன், விதைகள் முளைப்பதில் தாவர ஜிப்ரெலினின் பங்கு, தாவரங்களின் வளர்ச்சியில் குளோரோபிளாஸ்ட்களின் பங்கு, திரவ உரங்களைப் பயிர்களுக்கு வழங்கும் தொழில் நுட்பம், பருத்தியில் சத்துக் குறைகளும் உடலியல் கோளாறுகளும், தாவரங்களின் வளர்ச்சியில் நிக்கலின் பங்கு, பயறுவகைப் பயிர்களில் மறைக்கப்பட்ட யூரைட்டுகள், வறட்சியில் வளம் தரும் நெல்லி, மண்வளம் காக்கும் உயிர் உரங்கள், இலைவழி நுண்ணுரங்களின் பயன்கள், நிலக்கடலை விதை உற்பத்தி, மண்வளம் பெருக்கும் பசுந்தழை உரங்கள் ஆகிய தலைப்புகளில், வேளாண் அறிவியல் உத்திகள் கூறப்பட்டுள்ளன.

100.00
வேளாண் செய்திகள்

துல்லிய சாகுபடி உத்திகள்

துல்லிய சாகுபடி உத்திகள் இந்த நூலில், சம்பா நெல் நாற்றங்கால் தயாரிப்பு, சம்பா நெல் சாகுபடி, மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி, மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழுக்கள், சிறு மக்காச்சோளம் சாகுபடி, கம்பு சாகுபடி, நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி, ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி, ஆடிப் பட்டத்தில் சூரியகாந்தி சாகுபடி, நெல் தரிசில் எள் சாகுபடி, நெல் தரிசில் பருத்தி சாகுபடி, சத்துக் குறையால் பருத்தியில் ஏற்படும் பாதிப்புகள், கரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைத்தல், சொட்டுநீர்ப் பாசனம் வழியே உரமிடுதல், கரும்பு சாகுபடியில் புதிய உத்திகள், மறுதாம்புக் கரும்பு சாகுபடி, கரும்பிலிருந்து வெல்லம் தயாரித்தல், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி, இரட்டிப்பு இலாபம் தரும் ஊடுபயிர்கள், கடற்பாசி சாகுபடி, அசோலா சாகுபடி, ஒட்டுண்ணிக் களைகள், மஞ்சனத்திக் கட்டுப்பாடு ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டு உள்ளன.

130.00
துல்லிய சாகுபடி உத்திகள்

கறவை மாடு வளர்ப்பு

கறவை மாடு வளர்ப்பு மற்றும் பாலில் மதிப்புக் கூட்டுதல் இந்த நூலில், பசுமாடு வகைகள், மாட்டுக் கொட்டகைப் பராமரிப்பு, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, பால் கறவை முறைகள், கன்று வளர்ப்பு முறை, கறவை மாடுகளைத் தாக்கும் நோய்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள், பாலைப் பதப்படுத்துதல், தரக்கட்டுப்பாடு, பாலேடு, வெண்ணெய், நெய்த் தயாரிப்பு, சுவைமிகு பால், நறுமணப் பால் தயாரிப்பு, பன்னீர், சன்னா, கோவா தயாரிப்பு, ஐஸ்கிரீம் மற்றும் குல்பி தயாரிப்பு, பாலாடைக் கட்டிகள் தயாரிப்பு, பாலில் உறை சேர்த்துத் தயாரிக்கப்படும் பொருள்கள், பால் பேக்கேஜிங் முறைகள் ஆகிய தலைப்புகளில், தொழில் நுட்பங்கள் கூறப்பட்டுள்ளன.

140.00
கறவை மாடு வளர்ப்பு

தேனீ வளர்ப்பு

தேனீ வளர்ப்பு இந்த நூலில், தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனீக்களின் வகைகள், தேனீக் குடும்பம், தேனீக்களின் பணிப் பங்கீடு, தேனீ வளர்ப்பு முறை, தேனீ வளர்ப்பு உபகரணங்கள், தேனீ மேய்க்கால், தேனீக்களின் மொழி, தேனீக்களின் குணங்கள், தேனீக் கூட்டங்களைப் பராமரித்தல், தேனீக்களின் எதிரிகள், தேனீக்களும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளும், தேனீக்களும் பயிர் மகசூலும், தேனைச் சேகரித்தல், பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், தேனீக்கள் தரும் பொருள்கள், தேனீ வளர்ப்பில் செலவு - வரவு விவரம், தேனீ வளர்ப்போருக்கான தகவல்கள், நோக்கீடுகள், தேனீக்களின் வேண்டுகோள் ஆகிய தலைப்புகளில், தேனீ வளர்ப்புக் குறித்த உத்திகள் இடம் பெற்றுள்ளன.

130.00
தேனீ வளர்ப்பு

Terms & Conditions:

You agree to share information entered on this page with PACHAIBOOMI (owner of this page) and Razorpay, adhering to applicable laws.

Powered byRazorpay logo

Want to create a storefront page like this? Visit Razorpay Payment Pages to get started!

Contact Us:

pachaiboomi@live.com

+91-8148777145