

வாரிமேடு
BOOKS
Product description
வாரிமேடு வாரிமேடு என்னும் இந்தச் சொல்லும் இளைய தலைமுறை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் வைக்கப்பட்டது தான். உழுதாலும், பாத்திப் பிடித்தாலும், நாற்று நட்டாலும், தண்ணிக் கட்டினாலும், களை எடுத்தாலும், கதிரறுத்தாலும், கொஞ்ச நேரம் உட்கார்ந்து இளைப்பாற, உண்ண, ஊர்க்கதை பேச உரிமைப்பட்ட இடமாய் இருப்பது, வாரிமேட்டில் இருக்கும் பூவரச மரத்து நிழல் தான். நாச்சியும் பேச்சியும், இந்த வாரிமேட்டில் பகிர்ந்து கொள்ளும் பிரச்சனை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தின் உறவை, நட்பை, இன்பத்தை, துன்பத்தை, கையறு நிலையை மனக்கண் முன் நிறுத்தும். இதுவும் சுவையான கதைகளுடன் செய்திகளைத் தரும் நூலாகும்.
