

ஒட்டுத் திண்ணை
BOOKS
Product description
ஒட்டுத்திண்ணை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமங்களில் திண்ணை இல்லாத வீடே இருக்காது. அவரவர் வசதிக்கேற்ப, திண்ணையின் அளவும் அழகியலும் சொக்க வைக்கும். போகிற போக்கில் ஒரு நொடி நலம் விசாரிப்பதைப் போல, ஒரு செய்தியைப் பகிர்ந்து விட்டுப் போகிற இடம் இந்தத் திண்ணை. அதிலும் அங்கே உட்கார்ந்திருக்கும் ஆளைப் பொறுத்து, அதன் மதிப்பும், அந்த வீதியின் பெருமையும் இருக்கும். இதை, இந்தத் தலைமுறை மக்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் இந்நூலுக்கு ஒட்டுத்திண்ணை என்று பெயரிடப்பட்டது. இந்தத் திண்ணையில், குப்புசாமி, சுப்புசாமி ஆகிய இரு மனிதர்கள் பேசும் வாழ்வியல் கூறுகள் இடம் பெற்றுள்ளன. இயல்பான கதைகளுடன் செய்திகளைச் சுவையாகச் சொல்லும் நூல்.
